வசந்தன் வரிகள்...
இந்த பரந்த எழுத்துலகில் என்னுடைய வரிகளையும் பதிவு செய்வதற்க்கான முதல் அத்தியாயம் இது . என்னுடைய பேனாவின் அசைவிற்கும் நீங்கள் இசைந்து கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் ..........
Wednesday, July 27, 2011
Monday, March 28, 2011
வரலாறு படிப்போம்
சிலருக்கு குட்டி கதைகள் பிடித்திருக்கலாம் ,கவிதைகளை ரசித்திருக்கலாம் ,நாவல்களை நாளும் படித்திருக்கலாம் ,சுயசரிதைகள் எழுதி இருக்கலாம் ,ஆனால் வரலாறுகள் மீதான ஒரு மோகம் பலருக்கும் எப்பொழுதும் உண்டு .
நாளை என்ன நடக்க போகிறது என்பது மீதான ஆர்வத்தை காட்டிலும் நேற்று என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதில் உள்ள சுவாரசியம் தான் நம்மில் பலருக்கு அதிகமாக உள்ளது.
வரலாறுகள் நேற்று மிஞ்சி போன பழைய சோறுதான் ,ஆனால் சுண்ட வச்ச குழம்பும் ஊறுகாயும் அதனுடன் ஒட்டிக்கொண்டு வந்தால் அதன் மதிப்பு அதிகம்தானே ........இன்று நாம் வாழும் வாழ்க்கையும் நாளை சிலருக்கு வரலாறு தானே.
வரலாறு படிப்போம் முடிந்தால் நமக்கென்று ஒன்றை உருவாக்குவோம் .
Sunday, March 27, 2011
முதல் வரி
களிமண்ணில் இருந்து மனிதன் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் காலத்தில் இருந்து இன்று வரை மனித சமூக வளர்ச்சிக்கான ஒரு அங்கமாக திகழ்வது அவனுடைய பண்பாட்டு சிந்தனையும் பண்பட்ட கலாச்சாரமுமே என்றால் அது மிகையாகாது. ஆனால் மாறி வரும் இன்றைய சூழலின் பிடியில் சிதைந்து கொண்டிருக்கிறது மனித மனம் ..........
Subscribe to:
Posts (Atom)

