சிலருக்கு குட்டி கதைகள் பிடித்திருக்கலாம் ,கவிதைகளை ரசித்திருக்கலாம் ,நாவல்களை நாளும் படித்திருக்கலாம் ,சுயசரிதைகள் எழுதி இருக்கலாம் ,ஆனால் வரலாறுகள் மீதான ஒரு மோகம் பலருக்கும் எப்பொழுதும் உண்டு .
நாளை என்ன நடக்க போகிறது என்பது மீதான ஆர்வத்தை காட்டிலும் நேற்று என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதில் உள்ள சுவாரசியம் தான் நம்மில் பலருக்கு அதிகமாக உள்ளது.
வரலாறுகள் நேற்று மிஞ்சி போன பழைய சோறுதான் ,ஆனால் சுண்ட வச்ச குழம்பும் ஊறுகாயும் அதனுடன் ஒட்டிக்கொண்டு வந்தால் அதன் மதிப்பு அதிகம்தானே ........இன்று நாம் வாழும் வாழ்க்கையும் நாளை சிலருக்கு வரலாறு தானே.
வரலாறு படிப்போம் முடிந்தால் நமக்கென்று ஒன்றை உருவாக்குவோம் .
Good
ReplyDelete