Wednesday, July 27, 2011

அதிர்ஷ்டங்கெட்டவன்

ஒவ்வொரு முறை
  
         தோற்கும் போதும்

நான் ஜெயிக்கக்

         கற்றுக்கொள்கிறேன் 

என்பான்

          வெற்றியாளன் (அதிர்ஷ்டங்கெட்டவன்)!

இருந்தும் இல்லாமல் போனேன்




என் இமைகள் இன்னும் 
இறுக மூடிக்கொள்ள வில்லை 
என் செவிகள் இரண்டும் 
இன்னும் செவிடாக வில்லை 
என் சுவாசக் காற்று
இதுவரை ஓயிந்துவிட வில்லை
என் மூளையும் இன்னும்
செயலிழந்து போக 
வில்லை
இருந்தும் செத்துக் கிடக்கிறேன்
அவள் வாசமின்றி போன
இதயம் துடிக்க மறுப்பதால் !

Monday, March 28, 2011

வரலாறு படிப்போம்

சிலருக்கு குட்டி கதைகள் பிடித்திருக்கலாம் ,கவிதைகளை ரசித்திருக்கலாம் ,நாவல்களை நாளும் படித்திருக்கலாம் ,சுயசரிதைகள்  எழுதி இருக்கலாம் ,ஆனால் வரலாறுகள் மீதான ஒரு மோகம் பலருக்கும்  எப்பொழுதும் உண்டு .
                           நாளை என்ன நடக்க போகிறது என்பது மீதான ஆர்வத்தை காட்டிலும் நேற்று என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதில் உள்ள சுவாரசியம் தான் நம்மில் பலருக்கு  அதிகமாக உள்ளது.
                                     வரலாறுகள் நேற்று மிஞ்சி போன பழைய சோறுதான் ,ஆனால் சுண்ட வச்ச குழம்பும் ஊறுகாயும் அதனுடன் ஒட்டிக்கொண்டு வந்தால் அதன் மதிப்பு அதிகம்தானே ........இன்று நாம் வாழும் வாழ்க்கையும் நாளை சிலருக்கு வரலாறு தானே.
வரலாறு படிப்போம் முடிந்தால் நமக்கென்று ஒன்றை உருவாக்குவோம் .

Sunday, March 27, 2011

முதல் வரி

களிமண்ணில் இருந்து மனிதன் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் காலத்தில் இருந்து இன்று வரை மனித சமூக வளர்ச்சிக்கான ஒரு அங்கமாக திகழ்வது அவனுடைய  பண்பாட்டு சிந்தனையும் பண்பட்ட கலாச்சாரமுமே என்றால் அது மிகையாகாது. ஆனால் மாறி வரும் இன்றைய சூழலின் பிடியில் சிதைந்து கொண்டிருக்கிறது மனித மனம் ..........